கலித்தொகை- 2022
- J Jayanthi Chandran
- Jun 25, 2022
- 1 min read
Updated: Feb 13, 2024
காதல்தான்! இருக்கட்டும் செம்பூமி செழிக்கட்டும்
மக்கள்தான் சிரிக்கட்டும் குறிஞ்சிப்பூ அலரட்டும்
அந்தநீலப்பூ மலரட்டும் நிலப்பெண் நன்றே வளரட்டும்
கிளிதான் பேசவே, விழியால் இடமிருக்க
அவர்தான் விழியல்ல துன்பமே இன்று மருங்கும்
அகவைதான் அளவில்தான் பெறுக பெறுக
குறிஞ்சியோ பாடப்பட நகைத்தான் சற்றே வருதே
வருநாள் படபடவே சுடசுடவே வருதே
விருந்து வெறுக்கமருந்தது மறக்க
கடந்த சிறப்பை நினைக்க நினைக்க
இசைதான் இணிக்க துடிக்க பாடவே பாடவே
கயமை பொறுத்து வெறுத்து தேடினேன்
அலைப்போல் சிறுகாதல் கரைந்த கதையோ
களவில்லா கயமைக்கோ மிகவன் பரிட்சையோ
பெருந்துன்பம் கொடுமை நின்று யாரதை வினவ
அரசன் நீரோ
மறவன் தானோ
வணிக பேரோ
இதுதான் ஊரோ
பொறைவின் மகளீர்
ஊரின் நடுவே
பலவாழா பலகல்லா
படித்து நடித்து
நோயானதோ பேயானதோ
அளரோ நெருப்போ
தலைவா!
பெருமக்கள் இருபால் வருமிர்ப்பு வளர்க்க
தரணி செழிக்கத் தக
களவும் இறைமை, நிலம்தான் நிலைக்கும்
வரும்போரை துறத்தி பெற
ஜெ ஜெயந்தி சந்திரன்
تعليقات