சட்டம் சமய புத்தகமன்ரு
சந்தர்ப்பவாத புத்தகம்
அதில் உன் உணர்வுகள்
உன்னால் மட்டுமே
உறுதிப்படுத்தப்படும்
சட்டம் வக்கீள்கள் வடிவமைப்பதில்லை
வாதியாகிய நீ கட்டமைக்கின்றாய்.
சட்டம் கேள்வி கேட்கும் எல்லோர்க்கும் செவி சாய்க்கும்.
சனி ஞாயிறுப்போல் சனங்கள் கொள்கையும் கோட்ப்பாடும் மாறும்
கட்டுப் படுத்தி கடந்து செல்லும் சின்ன கோபம்
அடைய முடியா
தேர்தல் கோரிக்கையாய் மாறும்
உன் சட்டம் உன் கையில்.
சட்டம்மென்பது தவறுகளின் பஞ்சாயத்து அல்ல
தேவைளின் வரைவு
நீங்கள் கடக்கும்
அசௌகிரிய அனுபவத்தின்
பதில்கள்.
சட்டம் மன்னனின் நவரத்தின மந்திரிகள் முடிவுகளன்று
மக்களால் கோரி எழதப்படும் மக்கள் நீதி!
சின்ன சின்ன சில்லறை
சிலாய்ப்பாய் சற்றே
ஒத்தியிருத்தல்
சமத்துவம் சாகின்றது
உண்டியல் ஒருவனுக்காய்
பெருக்கின்றது.
சட்டம் வாழ்க்கை புத்தகமன்று
சில நானுரறு சரத்துக்களில்
வாழ்க்கை விளங்குதில்லை
எனினும் அது ஒரு
கூட்டு முயற்சி
ஒரு சரியான பாதையை நோக்கி
சட்டம் கருத்தரங்கமோ
பட்டிமன்றமோ அன்று
உண்மையை நோக்கிய நீதிபதியின் பயணம்.